அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலக அறை பூட்டை உடைத்துபொருட்களை சேதப்படுத்திய ஆசாமிகள்


அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலக அறை பூட்டை உடைத்துபொருட்களை சேதப்படுத்திய ஆசாமிகள்
x

வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அலுவலக அறை கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

திருப்பூர்

வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அலுவலக அறை கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு மேல்நிலைப்பள்ளி

வெள்ளகோவிலில் திருச்சி- கோவை சாலையில் அரசு அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1955-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகின்றன. தற்போது 650 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று காலை 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நேற்று காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் அவரது அறைக்கு வந்தார். அப்போது அறையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம ஆசாமிகள்

நேற்றுமுன்தினம் இ்ரவு மர்ம ஆசாமிகள் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் அறையின் கதவை உடைத்து தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து அங்கு இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் அருகில் இருந்த மோடம் மற்றும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு கருவி மற்றும் தலைமை ஆசிரியர் மேஜையில் இருந்த மேஜை டிராயரையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும் அதிலிருந்து அனைத்து பள்ளி அறைகளின் சாவியையும் எடுத்துக்கொண்டு, பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story