பிளஸ்-1 தேர்வில் பள்ளி சாதனை


பிளஸ்-1 தேர்வில் பள்ளி சாதனை
x

பிளஸ்-1 தேர்வில் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளி சாதனை

தென்காசி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளி பிளஸ்-1 பொதுத்தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.

எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 66 மாணவர்கள் எழுதினர். அதில் 575 முதல் 587 வரை 6 மாணவர்களும், 550 முதல் 574 வரை 9 மாணவர்களும், 525 முதல் 549 வரை 17 மாணவர்களும், 500 முதல் 524 வரை 11 மாணவர்களும், 450 முதல் 499 வரை 16 மாணவர்களும், 425 முதல் 450 வரை 6 மாணவர்களும் பெற்று சாதனை படைத்தனர்.

மாணவி அகல்யாதங்கம் 600-க்கு 587 மதிப்பெண்களும், மங்களச்செல்வி 584 மதிப்பெண்களும், மாணவர் பிரவின், மாணவி கமலிஷா இருவரும் 582 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனர். அரவிந்், பிரவீன் இருவரும் கணிதத்தில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் ஜெயஸ்ரீ 100 மதிப்பெண்களும், கணினி பயன்பாட்டில் அட்சயா, சாருமதி இருவரும் 100 மதிப்பெண்களும், கணக்குபதிவியல் மற்றும் வணிகவியலில் அகல்யாதங்கம், கமலிஷா இருவரும் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மங்களச்செல்வி கணக்கு பதிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார்.

வணிக கணிதத்தில் அகல்யா தங்கம், மங்களச்செல்வி இருவரும் 100 மதிப்பெண்களும் பெற்றனர். பிளஸ்-1 தேர்வில் மொத்தம் 12 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ராஜசேகரன், முதல்வர் டாக்டர் மகேஸ்வரி ராஜசேகரன், அக்காடமிக் டைரக்டர் ராஜ்குமார், துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story