விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி, கல்லூரி விடுதிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் மற்றும் மாணவிகளுக்கென 15 பள்ளி விடுதிகள், 4 கல்லூரி விடுதிகள் மற்றும் 1 தொழிற்நுட்ப கல்லூரி விடுதி இலவசமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து விடுதிகளிலும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

விண்ணப்பிக்கலாம்

தகுதியுடைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து, பள்ளி விடுதிக்கான விண்ணப்பத்தை வருகிற 28-ந் (புதன்கிழமை) தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கான விண்ணப்பத்தை ஜூலை 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தகுதியுடைய மாணவர்கள் இச்சலுகையை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story