மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா


மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
x

மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவுக்கு 4-வது வார்டு கவுன்சிலர் முத்துசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா வரவேற்றார். முன்னாள் கல்விக்குழு தலைவர் பட்டுலிங்கம், முன்னாள் ஆசிரியை வள்ளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.எக்ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் லீலாவதி திருக்குமரன், 3-வது வார்டு கவுன்சிலர் லோகநாயகி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயப்பிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். வட்டாரக்கல்வி அலுவலர்கள் முஸ்ரக்பேகம், சின்னக்கண்ணு, 2-வது மண்டல உதவி கமிஷனர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் முதன்மை செயல் அலுவலரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளருமான திருக்குமரன், சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பள்ளியில் ஸ்டார் ஆப் த இயர் முதல் 3 மதிப்பெண் பெற்றோர், 100 சதவீதம் விடுப்பின்றி பள்ளிக்கு வந்த மாணவர்கள், கையெழுத்து உட்பட பல்வேறு பிரிவுகளில் 85 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளில் நடனம், கரகம், சிலம்பம், கராத்தே, ஒயிலாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.முடிவில் ஆசிரியர் மணிகண்டபிரபு நன்றி கூறினார்.


Related Tags :
Next Story