பள்ளி ஆண்டு விழா


பள்ளி ஆண்டு விழா
x

தாயில்பட்டியில் அரசு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள மஞ்சளோடைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா, மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனியம்மாள் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்கரதாஸ் சிறப்புரை ஆற்றினார். உதவி ஆசிரியர் வள்ளிநாயகி வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் மல்லிகா, காஞ்சனா, ராஜலட்சுமி, விமலா, ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார். விழாவினை முன்னிட்டு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊராட்சி பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனியம்மாள் பேச்சிமுத்து சிறப்பு பரிசுகள் வழங்கினார்.



Related Tags :
Next Story