முதல்பருவ பாடபுத்தகங்கள் வினியோகம்


முதல்பருவ பாடபுத்தகங்கள் வினியோகம்
x
திருப்பூர்

திருப்பூர்,

 திருப்பூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகிற 13-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக முதல்பருவ பாடப்புத்தகங்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 94 பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

 1-ம் வகுப்புக்கு 3 ஆயிரத்து 50 செட், 2-ம் வகுப்புக்கு 3 ஆயிரத்து 557 செட், 3-ம் வகுப்புக்கு 3,413 செட், 4-ம் வகுப்புக்கு 3,900 செட், 5-ம் வகுப்புக்கு 4,155 செட், 6-ம் வகுப்புக்கு 1,799 செட், 7-ம் வகுப்புக்கு 1,600 செட், 8-ம் வகுப்புக்கு 1,450 செட் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (வியாழக்கிழமை) வினியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடக்கிறது.


Next Story