5 ஆண்டுகளாகியும் நிறைவடையாத பள்ளி வகுப்பறை கட்டுமான பணி
பொல்லிக்காளிபாளையத்தில் 5 ஆண்டுகளாக பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நிறைவடையாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள்.
அரசு மேல்நிைலப்பள்ளி
பொங்கலூர் அருகே பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கட்டிடம்கட்டும் பணி இன்னும் முழுமையடையவில்லை. கட்டிடம் கட்டும் பணி மிகவும் ெமதுவாக நடப்பதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
போதிய வகுப்பறை இல்லாமல் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இடநெருக்கடியில் சிக்கி தவித்துவருகிறார்கள். அதை போக்கும் வகையில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கட்டிடம் கட்டும் பணி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதிய கட்டிடம் கட்டப்பட்டால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஆனாலும் கல்வித்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுவட்டாரத்தில் இந்த பள்ளிக்கு ஒரு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியின் ஆசிரியர்கள் கால நேரம் பார்க்காமல் நல்ல முறையில் பாடம் சொல்லிக் கொடுப்பதால் சுற்றுவட்டாரத்தில் இந்த பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
விரைந்து பணியை முடிக்க வேண்டும்
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனாலும் இடபற்றாக்குறையால் இந்த பள்ளி திணறி வருகிறது. எனவே புதிதாக கட்டுமானப்பணி நடைபெற்று வரும் இந்த பள்ளி கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.5 ஆண்டுகளாகியும் நிறைவடையாத பள்ளி வகுப்பறை கட்டுமான பணி5 ஆண்டுகளாகியும் நிறைவடையாத பள்ளி வகுப்பறை கட்டுமான பணி