பள்ளி பஸ்-கார் மோதல்; 2 பேர் படுகாயம்
பள்ளி பஸ்-கார் மோதல்; 2 பேர் படுகாயம்
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக நான்கு வழிச்சாலை அணுகு சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாய்பாபா கோவில் அருகே எதிரே வந்த கார் மீது பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பள்ளி பஸ்சில் மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story