ஆற்றில் பள்ளி மாணவி பிணம்
பந்தநல்லூர் அருகே ஆற்றில் பள்ளி மாணவி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பந்தநல்லூர்:
பந்தநல்லூர் அருகே ஆற்றில் பள்ளி மாணவி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6-ம் வகுப்பு மாணவி
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள திருலோக்கி கெளுத்தூர் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். கொத்தனார். இவருடைய மகள் சுபிஷா(வயது 11). கொடியாலத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் சுபிஷா 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சுபிஷா வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் நார்த்தங்காய் பறிப்பதற்காக சென்றாள். பின்னர் சுபிஷா வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளி வழியாக பழவாறுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதன்பின் அவள் வீடு திரும்பவில்லை.
நீண்ட நேரமாக மகள் வீடு திரும்பாததால் அவளது பெற்றோர் சுபிஷாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சுபிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆற்றில் பிணம்
இரவு முழுவதும் சுபிஷா வீட்டுக்கு திரும்பி வராததால் பதறிப்போன குமார் இது குறித்து பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகாா் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் 'டசி' வரவழைக்கப்பட்டது. அது குமார் வீட்டின் பின்புறம் வழியாக வயல்வெளி வரை ஓடி திரும்பியது.
இந்த நிலையில் அருகே உள்ள பழவாற்றில் சுபிக்ஷா பிணமாக மிதப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவளது பெற்ேறாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடர்ந்து அவளது பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கள் மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினா்.
மேலும் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனா். இது குறித்து பந்தநல்லூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து மாணவி சுபிஷா ஆற்றில் தவறி விழுந்து இறந்தாளா? அல்லது அவளது சாவில் மர்மம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்றில் மாணவி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.