விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை
சின்னசேலம் அருகே விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை
சின்னசேலம்
சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜவுளிகடை உரிமையாளர் சீனிவாசன்(வயது 45). இவரது மகள் சுசிநிதா(16) சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணி வரையிலும் சுசிநிதா பள்ளிக்கு செல்ல புறப்படாமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் பள்ளிக்கு புறப்பட்டு செல்லும்படி கூறிவிட்டு ஜவுளி கடைக்கு புறப்பட்டுசென்றனர். பின்னர் இரவு 10 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது சுசிநிதா வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தார். அவரிடம் விசாரித்தபோது விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சுசிநிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.