தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
x

தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் ராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் திவ்யதர்ஷினி (15). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி திவ்யதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி தற்கொலை தொடர்பாக சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் விசாரணை நடத்தினார். 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story