தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

திருவாரூரில் தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

10-ம் வகுப்பு மாணவி

திருவாரூர் அண்ணா காலனியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் கோவையில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் ஷாலினி(வயது15). இவா் அருகே உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.மகேஸ்வரி திருவாரூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று வழக்கம் போல் ஷாலினி பள்ளிக்கு சென்றார். மகேஸ்வரியும் நகை கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மகேஸ்வரி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் ஷாலினி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி கதறி துடித்தாா். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

காரணம் என்ன?

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷாலினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூர் அண்ணா காலனி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story