விஷம் தின்று பள்ளி மாணவி தற்கொலை முயற்சி


விஷம் தின்று பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
x

கூத்தாநல்லூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் விஷம் தின்று பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்;

கூத்தாநல்லூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் விஷம் தின்று பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாலியல் தொல்லை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அவரது உறவினரான புள்ளமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகிலன்(19) ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது அவரது வீட்டுக்குள் புகுந்த முகிலன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டாா். உடனே முகிலன் அங்கிருந்து சென்று விட்டாா்.

கைது

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். மாணவியின் பெற்றோர் இது குறித்து முகிலன் பெற்றோரிடம் கேட்டனர். அப்போது முகிலனின் பெற்றோருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த எறும்பு மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோா் அவரை மீ்ட்டு சிகிச்்ைசக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாாின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story