பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x

சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் அகிலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், பள்ளியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்படுவது என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, குடிநீர், கழிவறை, வகுப்பறை, வளாக தூய்மை குறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை வரவேற்றார். முடிவில் தனலட்சுமி நன்றி கூறினார்.


Next Story