பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

கரூர்

தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியை வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காலத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு அந்த குழந்தைகளை கண்டிப்பாக பள்ளியில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் கல்வி குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. இதேபோல் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.

இதேபோல் தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் பள்ளி மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவராக மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில் மோகன், துணைத்தலைவராக பெருமாள், ஆலோசனை உறுப்பினராக தரகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கல்வியாளர்கள், சுய உதவிக் குழுவினர், ஊராட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் ஆகிய 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்யப்பட்டன. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசியர் அமலிடெய்சி செய்திருந்தார்.


Next Story