பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்


பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் கீதாராணி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மல்லிகா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பரமசிவன், கல்வியாளர் கணேசன், உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், 6 வயது முதல் 18 வயது வரை கல்வி இடைநிறுத்தல் குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.


Next Story