பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
நாகப்பட்டினம்
திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர்நிஷா இப்ராகிம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்றார். கூட்டத்தில் மாணவர்களை கல்வியியல் சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும், வருகிற மார்ச் மாதம் பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும், பள்ளியில் கழிவறைகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பர்வீன் பானு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story