ரூ.16½ லட்சத்தில் பள்ளி சுற்றுச்சுவர்
பரமக்குடி அருகே ரூ.16½ லட்சத்தில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
பரமக்குடி அருகே உள்ள டி.கருங்குளம் கிராமத்தில் உள்ள தீனியா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16½ லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் காசீன் முகமது தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் நீலா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் வரவேற்றார். நவாஸ்கனி எம்.பி. சுற்றுச்சுவரை திறந்து வைத்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சிராஜுதீன், அன்சாரி, போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் கதிரவன், டி. கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணி, ஜமாத் செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், பொருளாளர் ஹாருன் ரசீது, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திக் பாண்டியன், சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஆஷா பானு நன்றி கூறினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.