நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவன் பலி


நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவன் பலி
x

காடையாம்பட்டி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவன் பலியானார்.

சேலம்

கருப்பூர்

காடையாம்பட்டி, ராமமூர்த்தி நகர் பகுதி சேர்ந்தவர் மாதேஷ், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 3 மகள்களும், சக்தி (வயது 15) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் சக்தி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் சமீபத்தில் தேர்வு முடிவு வெளியானதில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் பழக சென்றுள்ளான். இதில் கிணற்றில் குதித்த போது, நீச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து மாணவன் சக்தியின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story