பள்ளி மாணவி சாதனை


பள்ளி மாணவி சாதனை
x

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாணவி சாதனை

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மேலும் 228 மாணவ-மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி மீனலோசினி 600-க்கு 584 மதிப்பெண்களையும், சீ.வர்ஷா 577 மதிப்பெண்களையும், மாணவி செ.ஜோதி காருண்யா, மாணவர் தி.மது காண்டீபன் ஆகியோர் 573 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். கணிதத்தில் 2 பேரும், இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 3 பேரும், உயிரியலில் 2 பேரும், கணிப்பொறி அறிவியல் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். தேர்ச்சி மற்றும் சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story