கராத்தே போட்டியில் பள்ளி மாணவர் சாதனை


கராத்தே போட்டியில் பள்ளி மாணவர் சாதனை
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:45 PM GMT)

அகில இந்திய கராத்தே போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி. சுரேஷ்குமார் செயல்பட்டார். இதில் தமிழ்நாடு சார்பாக தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹிரேஸ் அதிபன் கட்டா பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றான். அந்த மாணவனை பள்ளி முதல்வர் நோபிள் ராஜ், பள்ளியின் இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி, தலைமை ஆசிரியை சாந்தி, கராத்தே பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் பலர் பாராட்டினர்.


Next Story