நீச்சல் போட்டியில் பள்ளி மாணவர் சாதனை


நீச்சல் போட்டியில் பள்ளி மாணவர் சாதனை
x

ஹரியானா மாநிலத்தில் நடந்த நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர் ஜோஸ்வா தாமஸ் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

ஹரியானா மாநிலத்தில் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் நீச்சல் போட்டியில் தமிழக அணி சார்பில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸ்வா தாமஸ், ஹரிணி, பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர் ஜோஸ்வா தாமஸ் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 100 மீ. பிரஸ்ட் ஸ்டோக், 200 மீ. பிரஸ்ட் ஸ்டோக், 4x100 மீ. மேட்லி ரிலே ஆகிய 4 போட்டிகளிலும் வெண்கல பதக்கங்களை வென்றார். சாதனை படைத்த மாணவர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் சுல்தான் சிக்கந்தர் பாஷா, சிக்கந்தர் சார்வுன், அஜித்குமார் ஆகியோரை பள்ளி தலைவர் கிரகாம்பெல், பள்ளி தாளாளர் திவாகரன், பள்ளி முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story