பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் புவன்சங்கர் (வயது 15). இவன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.. நேற்று காலை 8 மணியளவில் டியூஷனுக்கு சென்று வந்த புவன்சங்கரை பள்ளிக்கு செல்லுமாறு அவரது தந்தை முருகேசன் கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் 2 மணியளவில் முருகேசன், வீட்டிற்கு வந்தபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது புவன்சங்கர், தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவன்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.