பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2023 2:42 AM IST (Updated: 19 Jun 2023 2:29 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

லால்குடி:

லால்குடியை அடுத்த சிறுமியங்குடி கிராமத்தில் உள்ள அக்ரகார தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 36). ஆட்டோ டிரைவர் இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்களுக்கு பிரசன்னா (16), சூர்யா (10) என 2 மகன்கள். பிரசன்னா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி மோகனப்பிரியா இறந்து விட்டார். இதன்பின்னர் சூர்யா தனது மாமா வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரசன்னாவை நாகராஜ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரசன்னா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் பிரசன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மாமா மதிவாணன் கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story