மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு


மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான்.

பள்ளி மாணவன்

தூத்துக்குடி பொன்னகரம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் என்பவருடைய மகன் விஷ்ணு வரதன் (வயது 9).

இன்னாசியார்புரத்தில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், தனது பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்களுடன் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது எதிர்பாரத விதமாக மின்வயரில் அவனது கைப்பட்டு, அவனது உடலில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே விஷ்ணு வரதன் உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story