பள்ளி மாணவி மாயம்


பள்ளி மாணவி மாயம்
x

பள்ளி மாணவி மாயம் ஆனார்.

கரூர்

தோகைமலை

தோகைமலை அருகே உள்ள பண்ணப்பட்டி ஊராட்சி சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் ராகவி (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராகவி வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில் காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் ராகவி கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ராகவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story