பள்ளி மாணவர்கள் சாதனை
வட்டார விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருவேங்கடம்:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி சங்கரன்கோவில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் திருேவங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கைப்பந்து, எறிபந்து, டெனிகாய்ட் ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற்றன. இதில் இப்பள்ளி ஆண்கள் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளிலும், பெண்கள் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என பிரிவுகளில் என மொத்தம் 24 விளையாட்டு பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். மேலும் மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள்.
மேலும் பேட்மிட்டன் ஜூனியர் ஆண்கள், பெண்கள் பிரிவுகளிலும், பெண்கள் பீச் வாலிபால் சீனியர், சூப்பர் சீனியர் பிரிவிலும் நேரடியாக மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினர்.