கோ-கோ போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை


கோ-கோ போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
x

கோவில்பட்டியில் நடந்த கோ-கோ போட்டியில் கீழஆம்பூர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

கோவில்பட்டியில் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் அம்பை அருகே உள்ள கீழ ஆம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் 12, 14, 17, 19 வயது பிரிவுகளில் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளிலும் முதலிடத்தை வென்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்டா. டிரஸ்டி லியாண்டர், முதல்வர் அமலா ஜூலியன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.



Next Story