நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் முறையை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்


நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் முறையை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
x

திருவத்திபுரம் நகராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் முறையை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி 6-வது வார்டில் கண்ணியம் நகர் பகுதியில் நுண்ணுயிர் உர மையம் உள்ளது.

இந்த மையத்துக்கு நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து சென்று நுண்ணுயிர் உரம் தயாரித்தல் முக்கியத்துவத்தையும், உரம் தயாரிக்கும் முறையும் நகராட்சி துப்புரவு அலுவலர் சீனிவாசன் விளக்கி கூறினார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் முறையை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.

பின்னர் மாணவர்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிப்போம் என உறுதி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன், நகரமன்ற உறுப்பினர் மல்லிகா ஆகியோர் பங்கேற்றனர்.

முடிவில் துப்புரவு ஆய்வாளர் மதனராசன் நன்றி கூறினார்.


Next Story