தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் வெற்றி


தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் வெற்றி
x

தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ராவிள்ள கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கல்வி மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடந்தது.

இதில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் அணி முதலிடம் பெற்றது.

இதேபோல் பெண்கள் பிரிவில் இளையோர், மிக மூத்தோர் போட்டியில் முதலிடம் பெற்றனர். இறகு பந்து போட்டியில் ஆண், பெண் ஒற்றையர் இரட்டையர் போட்டியில் முதலிடமும், எறிபந்து போட்டியில் ஆண்கள் 2-வது இடமும் பெற்றார்கள். இவர்கள் மண்டல போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மெகர் பானு, முதல்வர் பாலு, உடற்கல்வி ஆசிரியர்கள் மகேந்திரன், பகவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.


Next Story