பள்ளி ஆசிரியை தற்கொலை
தலைவாசல் அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்
தலைவாசல்:
பள்ளி ஆசிரியை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பணியாந்தூரை சேர்ந்த முருகேசன் மகள் பானுமதி (வயது 33), தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், தலைவாசல் நாவக்குறிச்சியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே நேற்று காலை பானுமதி, வீட்டில் தனது சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாவில் சந்தேகம்
தகவல் அறிந்தவுடன் பானுமதியின் தந்தை முருகேசன் மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தலைவாசல் போலீசில் முருகேசன் புகார் செய்தார். சப்-இ்ன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து பானுமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பானுமதி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தலைவாசல் விசாரணை நடத்தினர்.
Next Story