ஆய்வில் கலந்து கொள்ளாமல் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்


ஆய்வில் கலந்து கொள்ளாமல் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள்  பறிமுதல்
x

நாகை மாவட்டத்தில் நடக்கும் ஆய்வில் கலந்து கொள்ளாமல் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில் 21-ந்தேதி நடக்கும் ஆய்வில் கலந்து கொள்ளாமல் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக 43 பள்ளி நிறுவனங்களுக்கு சொந்தமான 120 பள்ளி வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. நாகை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 21-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி உள்பட குழுவினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களை பழுது நீக்கம் செய்து ஆய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

பறிமுதல் செய்யப்படும்

பள்ளி வாகனங்களுக்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளின்படி பள்ளி வாகனங்கள் முழுவதும் மஞ்சள் நிறத்திலும், முதல் உதவி பெட்டி, படிக்கட்டு வசதி, தீயணைப்பு உபகரணங்கள், அவசர கால கதவு, குழந்தைகள் அமர்வதற்கு ஏற்ற இடவசதி, புத்தகப்பை வைக்கும் இடம், வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என எழுதியிருத்தல், வேகக்கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா ஆகியவை பொருத்தி இருக்க வேண்டும். ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story