சுற்றுச்சுவரை சீரமைக்கபொதுமக்கள் கோரிக்கை
சுற்றுச்சுவரை சீரமைக்கபொதுமக்கள் கோரிக்கை
குடிமங்கலம் ஒன்றியத்தில் குடிமங்கலம், பூளவாடி, ராமச்சந்திராபுரம், பெதப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. குடிமங்கலம் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ள நிலையில் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். குடிமங்கலம் அரசு மேல்நிலைபள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் பல இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பழுதான சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த உள்ளனர்.