ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x

பரதராமி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகில் உள்ள பண்டபள்ளியைச் சேர்ந்த தம்பதியர் பாக்கியராஜ்-ஆஷா. இவர்களுக்கு 3 மகன்கள் உண்டு. 2-வது மகன் அபிஷேக் (வயது 9). இவன், அங்குள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். ஆஷா தனது மாடுகளை மேய்ப்பதற்காக குட்வவாரிபல்லி ஏரிக்கரை பகுதிக்கு சென்றார். அவருடன் மகன் அபிஷேக்கும், உறவினர் சிறுமியும் சென்றனர்.

சிறுவன் அபிஷேக், சிறுமியுடன் ஏரிக்கரை ஓரம் தண்ணீரில் இறங்கினான். அப்போது ஆழமான பகுதியில் அபிஷேக் சிக்கி கொண்டான். இதைக் கண்ட தாயார் ஆஷா கூச்சலிடவே கிராம மக்கள் ஓடி வந்து ஏரியில் இறங்கி சிறுவனை மீட்டனர். அவனை பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள், அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story