பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருவிடைச்சேரி கிராமத்தை சேர்ந்த சுதாகரின் மகள் சுகந்தி(வயது 16). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கும், அவரது தங்கைக்கும் இடையே பேனா, பென்சில் யாருடையது என்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சம்பவத்தன்று அக்காள், தங்கை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகந்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story