பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி


பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி
x

குடியாத்தம் அருகே பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

வேலூர்


குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மூத்த மகள் பூஜா (வயது 13) பள்ளிகொண்டா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வயல் வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

உடனடியாக இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 40 அடி தண்ணீரில் சுமார் ஒரு மணி நேரம் போராடி இரவு சுமார் 9 மணியளவில் மாணவி பூஜாவை பிணமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story