பள்ளிகளில் தூய்மை பணி மும்முரம்


பள்ளிகளில் தூய்மை பணி மும்முரம்
x

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அரியலூர்

தூய்மை பணிகள்

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் நாளை மறுநாள் (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் வளாகங்களில் தூய்மை பணிகளும், வகுப்பறையில் இருக்கைகள் ஏற்பாடு வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தள்ளி வைக்க கோரிக்கை

பள்ளிகளில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்கள், கழிவறைகள் சீரமைக்கும் பணிகள், சுவர்களுக்கு, கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு விலையில்லா பாடப்புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளன.

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை இன்னும் சில நாட்கள் தள்ளி வைக்கலாம் என்று மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story