பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் பள்ளி, கல்லூரிகள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் பள்ளி, கல்லூரிகள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-2023 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் மூன்று சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்களை tiruvallur.nic.in என்ற திருவள்ளூர் மாவட்ட இணையதளத்திலிருந்தும், (http://tnpcb.gov.in) என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 1.05.2023 ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story