பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்-தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கல்வி வளர்ச்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ேபசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியிலுள்ள ஆசிரியர்களின் வாயிலாக சிறந்த கல்வியினை வழங்கிட வேண்டும்.
அடிப்படை வசதிகள்
மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்திட வேண்டும். பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் பாதிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.