விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் சீரமைப்பு பணியை மழைக்காலம் தொடங்கும் முன்பு முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தில்    பள்ளிகள் சீரமைப்பு பணியை மழைக்காலம் தொடங்கும் முன்பு முடிக்க வேண்டும்  அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் சீரமைப்பு பணியை மழைக்காலம் தொடங்கும் முன்பு முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2021 - 2022- ம் ஆண்டில் பள்ளிகள் சீரமைப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசினார். அ ப்போது அவர் பேசியதாவது:-

4¾ கோடியில் சீரமைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 2021 - 2022-ம் ஆண்டில் 136 கிராமங்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கம் செய்ய தமிழக அரசால் ரூ4 கோடியே 86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், கழிவறைகள் சீரமைப்பு, குடிநீர் வசதி, சமையற்கூடத்தின் மேற்கூறை போன்ற 258 சீரமைப்பு பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்கும் முன்பே, இந்த பணிகளை முடிப்பதுடன், பணிகள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

இப்பணிகளை மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் ஒருங்கிணைத்திடவும், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் தினசரி 3 இடங்களில் ஆய்வு செய்திட வேண்டும். மேலும், வட்டார கல்வி அலுவலர்கள் சார்ந்துள்ள ஒன்றியத்திலுள்ள 10 பள்ளிகளை தவறாமல் பார்வையிட்டு அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story