நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் : அன்பில் மகேஷ்
நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
கும்பகோணம்,
நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது ;
கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம் தேதி (நாளை மறுநாள் ) பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அவ்வாறு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story