சோகத்தொரை இல்லம் தேடி கல்வி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சோகத்தொரை இல்லம் தேடி கல்வி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சோகத்தொரை இல்லம் தேடி கல்வி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி

சோகத்தொரை இல்லம் தேடி கல்வி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அறிவியல் விழிப்புணர்வு

கோடை விடுமுறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா சோகத்தொரை கிராமத்துக்கு உட்பட்ட சோகத்தொரை, சக்கலட்டி நேர்கம்பை ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. கல்வியாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். இதற்கு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய பயிற்றுனர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

வானவில் மன்ற மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர், இல்லம் தேடிக் கல்வி மைய வட்டார ஒருங்கிணைப்பாளர்களான கணேசன், பரமசிவம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை எடுத்துக் கூறினர்.

அறிவியல் தத்துவம்

இதைத்தொடர்ந்து வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, பிரியா ஆகியோர் அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் தத்துவத்தினை மாணவர்களுக்கு எளிய செயல்பாடுகள் மூலம் செய்து காண்பித்தனர். அப்போது மாணவ- மாணவிகள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாணவர்கள் வண்ண உடை அணிந்து உற்சாக நடனமாடி அசத்தினர். மேலும் நீலகிரி பாரம்பரிய கலாச்சாரத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். முடிவில் ஆங்கில ஆசிரியரும், இல்லம் தேடிக் கல்வி மையத்தின் தன்னார்வலருமான புஷ்பா நன்றி கூறினார். இதில் கிராம மக்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story