ஊராட்சி நடுநிலைப்பள்ளியில்அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஊராட்சி நடுநிலைப்பள்ளியில்அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓதவந்தான்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில்அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி வானவில் மன்றத்தினர் சார்பில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த ஜோதி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சிவக்குமார் ,வானவில் மன்ற கருத்தாளர் ராஜஸ்ரீ, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வசந்தி ஆகியோர்முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்விபணியாளர் பத்மினி வரவேற்றார் . மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அறிவர் இயக்க செயலாளர் நந்த ராஜேந்திரன், ஓரிகாமி, எளிய முறையில் மேஜிக் ஆகியவற்றை செய்து காட்டி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி. மாணவர்களுக்கு கல்விக்கு அப்பால் அரசு செய்து வரும் ஊக்கம் தரும் பணிகள், உதவித்தொகைகள் குறித்து பேசினார் .முடிவில்சந்தன மேரி நன்றி கூறினார்.


Next Story