அறிவியல் கண்காட்சி


அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் மசூதைக்கா மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் மசூதைக்கா மேல்நிலைப்பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு பயிலும் மாணவ-மாணவிகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹஸன் மக்தும் சாஹிபு தலைமை தாங்கினார். நைனா முஹம்மத் பெரிய குத்துபா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் வாஹித் சாஹிப், கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் முகமது அலி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முகமது அனிபா, முகமது அலி, முகமது புகாரி, ஆகியோர் முன்னிலை வைத்தனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது உசேன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் கடையநல்லூர் வனவர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தனர். அப்போது மாணவ மாணவிகளின் பல்வேறு அரிய வகை கண்டுபிடிப்புகளை பார்த்து பாராட்டினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் செய்யது அன்பியா, பீர் முகமது, அமானுல்லா, அப்துல் காதர், காஜா மைதீன் உட்பட பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹ்மான் நன்றி கூறினார்.


Next Story