தூத்துக்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தூத்துக்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவுநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பள்ளி தாளாளர் பெர்னதெத் மேரி, தலைமை ஆசிரியை சகாயமேரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் கற்றாழையின் வகைகள், பிராசியா மலர் மாதிரி, டி.என்.ஏ. மாதிரி, தாவரவியல் பூங்கா, ரத்த ஓட்ட பாகங்கள், மீன் வகைகள், ஹைட்ராலிக் கிரேன், ஏ.டி.எம். மாதிரி, எரிமலை உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சியில் சிறந்த மாதிரிகளை ஆசிரியை சகாயஆனந்தி விண்ணரசி தலைமையிலான ஆசிரியர்கள் தேர்வு செய்தனர்.
தொடர்ந்து கண்காட்சியை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர். மேலும் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
Related Tags :
Next Story