மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி


மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 91-வது பிறந்தநாளையொட்டி மாணவ- மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சிபள்ளியில் நடைபெற்றது.மாணவர்களின் அறிவியல் திறமையை அதிகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நடந்த தனித்திறன் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர்.இதில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பேச்சு போட்டி, வினா விடை ஆகியவையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் பேரில், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் உருவாக்கிய அறிவியல் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தார்.ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.


Related Tags :
Next Story