ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா


ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கூழையாறு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கூழையாறு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உமா தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இந்திராகாந்தி, மேலாண்மை குழு தலைவி சுந்தரவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் கலந்து கொண்டு பேசினார். ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர் ராஜஸ்ரீ மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகள், கணித புதிர்கள், தொப்பி செய்தல், படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காண்பித்தார். கடலோர பகுதி இயற்கையின் அறிவியல் சுழற்சிகளையும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். மாணவ மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். இதில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் தீபலெட்சுமி, தமிழ்மொழி, கௌரி, முகிதா, அம்பாளினி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story