அரசு பள்ளியில் அறிவியல் ஆயிரம் நிகழ்ச்சி
சீர்காழி அருகே அரசு பள்ளியில் அறிவியல் ஆயிரம் நிகழ்ச்சி
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
சீர்காழி அருகே எடமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆயிரம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கார்த்திக் வரவேற்று பேசினார். ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கவுன்சிலர் லெட்சுமி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் வானவில் மன்ற கருத்தாளர் மீனாட்சி, குழந்தைகளுக்கு எளிய முறையில் கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகள் போன்றவற்றை சிறப்பான முறையில் கற்றுக்கொடுத்தார். முடிவில் தன்னார்வலர் பவஸ்ரீ நன்றி கூறினார்.
Related Tags :
Next Story