அறிவியல் ஆலோசனை குழு கூட்டம்


அறிவியல் ஆலோசனை குழு கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில்அறிவியல் ஆலோசனை குழு கூட்டம்

நாகப்பட்டினம்

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 10-வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமையில் நடந்தது. இதில் ஐதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக மண்டல இயக்குனர் மீரா கலந்து கொண்டு, வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள பல்வேறு செயல் திட்டங்களை பார்வையிட்டு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நபார்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆட்டுக்குட்டிகள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு மின்சார உணர்த்திகள் ஆகியவை வழங்கப்பட்டன. மீன்வளப் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ராஜாகுமார் வரவேற்றார்.வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்பாடுகளை விளக்கி கூறினார். வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story