நத்தம் அருகே விஷஎறும்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு


நத்தம் அருகே விஷஎறும்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு
x

நத்தம் அருகே விஷஎறும்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

நத்தம் வேலாயுதம்பட்டி அருகே கரந்தமலை அடிவார தோட்டங்களில் உள்ள செடி, கொடிகளில் விஷ எறும்புகள் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இந்த எறும்புகளால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இன்று கரந்தமலை பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர்.

அதில், இந்த வகை எறும்புகள் ஆஸ்திரேலியா மற்றும் மேற்குஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் காணப்படுவதாகவும், மிகவும் ஆபத்தானவை என்றும், கேரள வனப்பகுதிகளில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த எறும்புகள் கடந்த சில மாதங்களாக கால்நடைகளை தாக்கி நோய்களை உண்டாக்கி வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் அரிய வகை எறும்புகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story